Description
இந்நூலில் 2511 தலைப்புகளின்கீழ் திருமறைக் கருத்துத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இக்கருத்துத் தொகுப் புகள் திருமறையைப் படிப்போரது எண்ண அலைகளை முடுக்கிவிடக்கூடிய திறம் பெற்றவை, பொருட் செறிவுமிக்கவை, அறிவூட்டுபவை, வாழ்வுக்கு வளம் சேர்க்கக்கூடியவை. இறைச் செய்தியாளர்கள், திருமறை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணாக்கர், ஏனைய விசுவாசிகள் அனை வருக்கும் பயன் தரக்கூடிய நல்ல நூல்.
 
				
 
														
