Description
மொழிபெயர்ப்பு: திரு. கிறிஸ்டியன் கீலர்
கடவுளுடைய மக்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங் களே கடவுளின் வரலாறாக இருக்கிறது. இது அவருடைய கிருபை, இரக்கம், ஞானம், வல்லமை ஆகியவற்றைச் சொல்லும் சமிக்ஞைத் தூண்களாகத் திகழ்கின்றன. இவ்வரலாறுகள் நமக்கு அறைகூவலாக இருப்பது மட்டுமின்றி, இன்றைய காலகட்டத் திலும் கர்த்தரைச் சேவிக்க விரும்பி முன்வருவோருக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தும் உந்துவிசையாகவும் உள்ளன. கடந்த இருபது நூற்றாண்டு காலத் திருச்சபையின் வரலாற்றில், கணக்கற்ற அருட்பணியாளர்களின் மெய்சிலிர்க்கச் செய்யும் சரித்திரங் களும், உள்நாட்டிலும் அயல்நாட்டுப் பணியிலும் கர்த்தருக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த திருத்தொண்டர்களின் வாழ்க் கையும் நிரம்பிக் கிடக்கின்றன. இந்த நூல் தேவ ஊழியர்களின் முழு வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பல்ல. மாறாக, அருட் தொண்டர் பலரின் வாழ்க்கையில் தேவ வல்லமையால் நடை பெற்ற சிற்சில நிகழ்வுகளின் தொகுப்பேயாகும்.




