Description
இந்தப் புத்தகம் இரு அரசுகளின் கதையைக் குறித்துப் பேசுகிறது. ஒன்று தேவனற்று இயங்கும் உலக அரசு, மற்றொன்று நிலையான இறை அரசு. இவை ஒன்றுக்கொன்று எதிர் எதிரானவை. அவற்றின் தன்மைகள், அவை செலுத்தும் ஆதிக்கங்கள், அவற்றின் வழிமுறைகள் ஆகியவற்றை இதன் ஆசிரியர் துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். விசுவாசிகள் இத்தகைய வேறுபாடுகளை உணர்ந்து, தேவ ராஜ்யத்துக்கு உரியவர்களாக வாழ இந்நூல் பெரிதும் உதவும்.



