Description
பத்துக் கட்டளைகள் பழைய ஏற்பாட்டுக் கால இஸ்ரவேலரருக்கான சன் மார்க்க ஒழுங்குகளாக இருப்பினும், கிறிஸ்தவர்களுக்கும் உரிய சட்டங் களாகும். அவை பண்டைய சட்டங்கள் என்றாலும் தற்கால வாழ்க்கைக்கும் அதிகப் பொருத்தமானவையாகும். புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் அதை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர். இக்கட்டளைகளை எங்ஙனம் வாழ்க்கைச் சட்டமாக்கிக்கொள்ளலாம் என்பதை இப்புத்தகம் தெளிவு செய்கிறது.




