Description
திருமணம் கடவுளின் படைப்பில் ஒரு பங்காகவே இருக்கிறது. எனவே இல்லற வாழ்வின் பல்வேறு கூறுகள் படைப்பின் விவரங்களிலேயே புதைந்துகிடக்கின்றன. படைப்பின் நுட்பங்களை ஆராயும்போது, இனிமையான இல்லற வாழ்க்கைக்கான இரகசியங்களைக் கண்டு கொள்கிறோம். இந்தச் சிறிய நூல் இத்தகைய அம்சங் களைக் கோடிட்டுக் காட்டி, தேவதிட்டப்படி நல்லதொரு கிறிஸ்தவ இல்லறத்தை கட்டமைக்க பேருதவி புரிகிறது.
மேலும் திருமணத்துக்காக ஜெபத்துடன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இளையோருக்குத் தேவையான நல்ல ஆலோசனைகளை இந்நூல் வழங்குகிறது. இத்துடன் ஏற்கனவே மணமானவர்களும் இந்நூலைப் படிப்பதன் வாயிலாக இல்லற வாழ்க்கையின் பொருளை மீள் உருவாக்கம் செய்து, கர்த்தருக்குப் பிரியமான வகையில் கிறிஸ்துவின் மணவாட்டியாம் திருச்சபையில் பயனுள்ள பாத்திரங்களாய்த் திகழ்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது.




