Description
விசுவாசிகள் ஆற்றவேண்டிய மிக உன்னதப் பணி சுவிசேஷ பணியாகும். அழிவுக்கு நேராகச் செல்லும் மக்களைச் சந்தித்து, “நானே வழியும் சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்று விளம்பிய இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் வழியைக் காட்டி, அதில் நடத்துவதைப் போல், சிறப்பான இறைபணி வேறு எதுவும் இல்லை. வில்லியம் மெக்டொனால்டு அவர்கள் இப்பணிக்கான புனித வேதாகமம் கூறும் வழிகளை ஆய்ந்து, தெளிவான வகையில் எளிய முறையில் நமக்குத் தந்துள்ளார். தனியாள் ஊழியத்துக்கு இந்நூலை ஒரு கையேடாகப் பயன்படுத்தலாம்.




