Description
1752 – ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு திருத்தப் பணியை பிப்ரீசியஸ் ஏற்றுக்கொண்டார். கற்றோரும் பாமரத்தாரும் பயன்படும் நோக்கில் அவரது மொழிபெயர்ப்பு 1772 – இல் வெளிவந்து, பல பதிப்புகளைப் பெற்றது. இவர் கிரேக்கத்திலும் தமிழிலும் புலமை பெற்றிருந்ததால் இது “தங்கத் திருப்புதல்” என்று அழைக்கப்பட்டது. இம்மொழிபெயர்ப்பு மூலத்திலிருந்து சிறிதும் வழுவாது அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இன்று பிற மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும், ஆய்வுக்காகவும் இதனை மறுபதிப்பு செய்துள்ளோம்.




